Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வானன் கலந்துகொடார். இப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். இவர் கடந்த இரண்டு முறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைஃபிள் கிளப்பில் நடைபெறவிருக்கிறது. அப்போட்டியிலும் இவ கலந்துகொள்ள உள்ளார். அதற்கான selection trail ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் கடந்த 7-8 தேதிகளில் நடைபெற்றது.