Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

குப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் பாத்திமா நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான அதிரையர்கள் பல லட்சம் ரூபாய் செலவில் நிலங்களை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இங்குள்ள குடிநீர் தேக்க தொட்டி அருகே தற்போது குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமணத்தின் போது சேரும் குப்பைகளும், உணவக குப்பைகளும் இங்கு அதிகம் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதிரையில் சேரும் குப்பைகள் மதுக்கூர் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொட்டப்படும் நிலையில் இங்கு புதிய குப்பை கிடங்கு உருவாக்கப்படுவது போல் தெரிகிறது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால், அதிரையர்களின் நிலங்கள் குப்பை கிடக்கிற்குள் புதைந்து போகும் சூழல் ஏற்படும். எனவே தங்கள் நிலத்தை பாதுகாக்க இங்கு நிலம் வாங்கி இருக்கும் அதிரையர்கள் முன் கூட்டியே தகுந்த புகார்களை அளிப்பது அவசியம்.