Adirai pirai
posts

இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல தடையில்லை!

இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல தடையில்லை என ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சவுதியில் தடை விதிக்கப்பட்டதாக வதந்திப்பரவியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாகம், அந்திய நாட்டு பண மேலாண்மை சட்டம் 2005-இன் படி ஹஜ் பயணிகள் இந்தியாவில் வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்வதில் தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.