Adirai pirai
Technology உள்ளூர் செய்திகள்

அதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் அறிமுகம்!

அதிரை பிறை இணையதளம் துவங்கி 6 ஆண்டுகள் நிறைவுபெற்று கடந்த 17ஆம் தேதியுடன் 7ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 6அண்டுகளுக்கு முன்னர் ரமலான் தலைபிறை அன்று துவங்கப்பட்ட நம் தளம் தற்போது 7வது ஆண்டுக்குள் நுழைவது வாசகர்களாகிய உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு நடத்தப்படும் இந்த இணையதளம் மூலம் அதிரையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உண்மை தண்மை மாறாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 06 வருடங்களில் மொத்தம் 10,526 செய்திகளை பதிந்துள்ளோம். வெறும் செய்திகளை மட்டும் தராமல் உள்ளூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவிலான நிகழ்வுகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி அறிவுரைகள், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், அதிரை புகார்கள், அயல் நாட்டில் வாழும் அதிரையர்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், விளையாட்டு செய்திகள் போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து வருகிறோம். எந்த முன் அனுபவமும் இன்று யாரையும் சாராமல் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் முதலாவது ஆண்டு முதல் தற்போது வரை படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது வாசகர்கலின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அதிரையின் முக்கியஸ்தர்களாக, சாதனையாளர்கள் போல் அடையாளப்படுத்தப்பட்டு வந்த சூழலில் திரைமறைவில் இருக்கும் சமுக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் போன்ற பலரை நமது தளம் வெளியிலகிற்கு அடையாளம் காட்டியுள்லது.

அத்துடன் நாம் பதியும் புகார் சம்பந்தமான பதிவுகள் வெறும் செய்திகளாக பதியாமல் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அன்புடன் கோரிக்கையாக அளித்து ஒரு ப்ளில்ல தருணங்களில் அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் நண்மை செய்தால் பாராட்டுவதும், சரி இல்லையெனில் கண்டிப்பதையும் வழக்கமாக இந்த தளம் கொண்டுள்ளது.

“நீதி” என்ற ஒற்றை வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு  அதிரை பிறை செயல்பட்டு வருகிறது. 

PIRAI TUBE, DR. PIRAI, மண்டே மசாலா, LAWYER PIRAI, LADIES CARE, பிறையின் பார்வை, ALERT போன்ற வித்தியாசமான தலைப்புகளின் கீழ் காணொளிகளையும் மருத்துவக் குறிப்புகளையும், ஊரில் தற்சமயம் நடைபெறும் நிகழ்வுகளையும், பல்சுவை தகவல்களையும் பதிந்து வருகிறோம்.

அதிரை அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளித்து நமது இளைஞர்களை ஊடகத்துறையில் இதன் மூலம் மிளிரச்செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது போன்று எந்தவொரு லாப நோக்கமும் இன்றி அதிரை மக்களுக்கு இந்த அதிரை பிறை என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களாக சேவையாற்றி வருகிறோம்.

அதிரை பிறை வளர்ச்சிகளுக்கு மத்தியில் பல்வேறு சோதனைகளையும் சந்தித்துள்ளது. உண்மை செய்தியை வெளியிட்டதற்காக கைது நடவடிக்கை, இணையதள பக்க முடக்கம், முகநூல் பக்கங்கள் முடக்கம், மிரட்டல்கள், அவதூறுகள் என பல சோதனைகள் எதிர்த்து போராடி சாதனைகளாய் மாற்றவே முயன்று நாம் வருகின்றோம்.

அதிரையின் பெரும்பாலான தளங்கள் ப்ளாக்ஸ்பாட்டாக இயங்கி வந்த தருணத்தில் நேரடி செர்வர் மூலம் ப்ரொபசனல் தளத்தை அறிமுகம் செய்தோம். இந்த சூழல் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப தளத்தை மறு வடிவமைப்பு செய்து வெளியிட்டு வருகிறோம்.

அதன் அடிப்படையில் 7ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் குடிய புதிய இணையதளத்தை நாம் வடிவமைத்துள்ளோம்.

இதன் மூலம், அனைத்து செய்திகளையும் தலைப்பு வாரியாக காணும் வசதி உள்ளது. மேலும் இந்த தளம் மூலம் மொபைல் பயனர்களும் இலகுவாகவும் கணிணியில் பயன்படுத்துவதைப் போன்று பயன்படுத்தலாம். மிக வேகமாக செய்திகளை பார்ப்பதற்க்கும் படிப்பதற்க்கும் வசதியாகவும், அடுத்தடுத்த செய்திகளை கிளிக் செய்யாமல் தொடர்ச்சியாக பேஸ்புக் பாணியில் படிக்கும் புதிய வசதி நமது தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாசகர்களின் புரிதழுக்கு ஏற்ப அழகிய வடிவமைப்புடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

நாங்கள் பதியும் அனைத்து செய்திகளையும் படித்து தவற்றை சுட்டிக்காட்டியும் நல்லதாக இருந்தால் ஆதரித்தும் அதிரை பிறை நேயர்களுக்கும் தங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும் புகார்களையும் எங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் அதிரை வாசகர்களுக்கும், அந்த செய்திகளை சமுக தளங்களில் பிறருக்கு தெரியப்படுத்தும் நல்லுள்ளங்களுக்கும் அதிரை முகநூல் நண்பர்களுக்கும் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் அதிரையில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் அனைத்து தருணங்களிலும் எங்களுக்கு அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும் தந்து வரும் நல்ல நெஞ்சங்களுக்கும் அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிரை பிறையில் செய்தியாளராக, செய்தி பதிவாளராக, போட்டோகிராபராக அல்லது உறுப்பினராக இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 9597773359