Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்!

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் ”பாலிதீன் பை” முதல் இடத்தில் இருக்கிறது. பாலிதீன் பைகளை பயன்படுத்திய பிறகு அவை குப்பையில் வீசி எறியப்படுகின்றன. மண்ணோடு மண்ணாக மக்காத இந்த பாலிதீன் பைகளால் தாவரங்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. அனைத்து வகை உயிரிணங்களுக்கும் இது எமனாக மாறியுள்ளது. சுட, சுட பாலிதீன் பைகளில் கட்டி கொடுக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயண மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் உருவாகும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இதன் எதிரொலியாக ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதை தற்போதே அதிரையர்கள் பழக்கப்படுத்தி வருகின்றனர். இதற்கு வியாபாரிகளும் உறுதுணையாக இருந்து டம் 1: மளிகை கடையில் பேப்பரில் மடித்து பொருட்களை வாங்கும் அதிரையர்படம் 2 மற்றும் 3: இலையில் கறியை மடித்து விற்பனை செய்யும் கறிக்கடைக்காரர்படம் 4: அதிரை கடைத்தெருவில் தூக்குச்சட்டியில் மீன் வாங்கி செல்லும் அதிரையர்