Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மனநலம் குன்றிய மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்

ஆறுமுக கிட்டங்கி காரத்தெருவை சேர்ந்த மருதப்பா வின் மனைவி அஞ்சம்மாள் கடந்த 9ம் தேதி ECR சாலையோரம் அமர்ந்திருப்பதை கண்டோம். இந்த மூதாட்டியிடம் கேட்ட பொழுது “தன் மருமகள் தன்னை விரட்டி விட்டதாகவும். கவனிக்க ஆள் இல்லை என்பது போல் கூறினார்.” சிலரிடம் நாம் விசாரித்ததில் இவர் சற்று மன நலம் குன்றியவர் இருப்பது தெரிய வந்தது.ஆனாலும் நாம் கேட்ட பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தார். இவர் வசிக்கும் தெரு முதல் பேரன் பெயர் வரை சரியாக கூறினார். ஒரு சில இடங்களில் இவர் சற்றி மாறுபட்டு பேசினார். சில காரணங்களால் இந்த முதியவர் இப்படி ஆகிவிட்டார் என்பது போலவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலைக்கு வயதும் ஓர் காரணமாக இருக்கலாம்.அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று. மறுநாள் வீட்டில் விடப்பட்டார். இன்னிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததை கேள்விப்பட்டதும். மனதில் ஓர் கலக்கம் ஏற்பட்டது.மனநலம் சரியில்லா இது போன்ற மூதாட்டியை வீதியில் விட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்க்க இயலாது. அவரவர் பெற்றோர் அவரவரின் பொக்கிசம் போன்றவர்கள். பேணி காத்திட வேண்டியது அவரவர் கடமையாக என்பதை அனைவரும் உணர வேண்டும்.அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக.- அதிரை சாலிஹ் (அதிரை பிறை)