Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஷிபா மருத்துவமனையின் 30ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு புதிய இணையதளம் அறிமுகம்!

ஷிஃபா மருத்துவமனையின் புனரமைப்பு முடியும் தருவாயில் இருக்கும் இந்த வேளையில் மருத்துவமனையின் இணைய தளத்தை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இன்றைய தினம் 24.07.2018 ஷிஃபா மருத்துவமனையின் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தினம். இன்றைய தேதியில்தான் 30 வருடங்களுக்கு முன்பு 24.07.1988ல் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் விதமாக இந்த இணைய தளத்தை இன்றைய தினத்தில் அறிமுகப்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனையை ஆரம்பத்தில் நிறுவிய பல நல்ல உள்ளங்களை நினைவுகூர பலருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் இந்த தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இறைவன் அந்த நல்ல உள்ளங்களுக்கு ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக ஆமீன்.

அவர்கள் இந்த மருத்துவமனையை ஊரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஏற்படுத்தினார்கள் அல்லாமல் பேருக்காகவோ, புகழுக்காகவோ செய்யவில்லை.இந்த இணையதளம் கட்டமைப்பில் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. நாளடைவில் இது செம்மைப்படுத்தப்பட்டு மருத்துவமனை திறக்கும் தருவாயில் அது பூர்த்தி செய்யப்படும், இன்ஷா அல்லாஹ். கூடிய விரைவில் கைபேசியில் உபயோகப்படுத்த ஆண்டிராயிடு மற்றும் ஐபோன் செயலியும் மற்றும் தமிழ் இணைய தளமும் அறிமுகப்படுத்தப்படும் நீங்கள் இந்த இணைய தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டால் மருத்துவனை செய்திகள், தொடங்கும் நாள், சிறப்பு மருத்துவர்கள் வருகை மற்றும் சிறப்பு சலுகைகள் பற்றிய செய்திகளை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அதோடுமட்டுமல்லாமல் உங்களுடைய கருத்துக்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

இணைய தள முகவரி: http://www.adiraishifahospital.com

இப்படிக்கு,

ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம்