Adirai pirai
உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மல்லிப்பட்டினம் மீனவர்கள் விடுதலை

மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த செய்புல்லா என்பவரது படகில் நாராயணன், சக்திதாஸ், ஆயுள்பதி, கண்ணதாசன் ஆகியோர் நேற்று கள்ளிவயல் தோட்டம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதே போல் அப்துல் வகாப் என்பவருக்குச் சொந்தமான படகிலில் சில மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இரு படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் சுற்றி வளைத்துச் சிறைப்பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் எச்சரித்து விடுதலை செய்தார். மீண்டும் எல்லை தாண்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்த அவர், 29 ஆம் தேதி படகின் ஆவணங்களுடன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டார்.