Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரையை நோக்கி வரும் தண்ணீர்… காணாமல் போன சி.எம்.பி வாய்க்கால்!

டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக, நேற்று, கல்லணையில் இருந்து, 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து காவிரி கிளை நதிகளுக்கு, பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், குடிமராமத்து பணி சரியாக மேற்கொள்ளப்படாததால் கடை மடை பகுதிகள் வரை வரும், பாசன வாய்க்கால்களில் புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக அதிரை CMP வாய்கால் பெரும்பாலும் தூர்ம்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அதிரைக்கு தண்ணீர் வரும் CMP வாய்க்கால் முழுவதுமாக தூர்ந்து பொய் உள்ளது. இந்த நீர் வழித்தடத்தை தற்போது தூர்வாரும் பணிகள் அவசரகெதியொல் நடைபெற்று வருகிறது.