Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதிய தார் சாலை! மழைக்கு தாங்குமா ?

அதிரையில் புதிய தார் சாலை அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. நமதூர் வாய்கால் தெரு, நடுத்தெரு கீழ்புறம், மார்கெட் வழியான புதிய தார் சாலை அமைபதற்கான முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக பழைய தார் சாலைகளை JCB இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றனர்.

சாலை அமைப்பது நல்ல விஷயம் தான் அதே சமயம் உடைக்கப்பட்ட சாலையின் மீது புதிய சாலை அமைப்பதனால் சாலையில் உயர்மட்டம் அதிகரித்து மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமின்றி பள்ளமான சாலையில் இருந்து உயர்த்தப்பட்ட சாலைகளில் வாகனங்களை ஏற்றுவதன் மூலம் பல விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

உடைக்கப்பட்ட சாலையின் கசடுகளை (தார், ஜல்லி துகள்கள்) அப்புறப்படுத்திய பிறகு முறையாக சாலை அமைப்பது பல வகையில் நன்மை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்னர் பழைய போஸ்ட் ஆபீஸ் – ஆஸ்பத்திரி தெருகளுக்கான புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

தரமற்ற சாலை அமைத்ததுடன் சாலையில் ஒட்டுகள் போடப்பட்டுள்ளது. புதிய சாலையில் ஒட்டுப்போட அவசியம் என்ன?. தரம் குறைந்த சாலைகளால் யாருக்கும் எவ்வித பயனுமில்லை.

சாலைகளில் கிடக்கும் கூலம், குப்பைகள் மழையில் அடித்து செல்லப்படுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் நமதூரில் சாலையிலுள்ள தார், ஜல்லி துகள்களும் சேர்ந்து நீரோடு அடித்து செல்ல கூடிய அதிநவீன முறையில் அமைத்திருப்பது ஆச்சர்யம் தான். அந்த அளவில் தான் நம் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது.

சாலை நமக்கு இலவசமாகவோ, யாசகமாகவோ யாரும் வழங்குவதில்லை. நம் வரிப் பணத்தில் தான் அமைக்கப்படுகிறது.

ஒட்டு போடப்பட்ட சாலை: (பழைய போஸ்ட் ஆபீஸ் – ஆஸ்பத்திரி தெரு சாலை)

இனியாவது அமைக்கக்கூடிய சாலைகள் மக்களுக்கு பயனுள்ளதாகவும், தரமானதாகவும் அமைத்தல் வேண்டும்.