Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

இதுக்கு பேரு சேர்… ஆனால் அமர முடியாது… அதிரை பேருந்து நிலையத்தின் அவல நிலை!

அதிரையில் புதிய வணிக வளாக கட்டிடங்களுடன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பதற்காக ஆங்காங்கே இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த நாற்காலிகள் அனைத்தும் முறையாக பாரிக்கப்படாத காரணத்தால் உடைந்து திரு பிடித்த நிலையில் காணப்படுகின்றன. இதில் அமர்ந்துவிட்டால் உங்கள் ஆடை அல்லது உடலில் கீறல் விழுவது உறுதி என சொல்லும் அளவிற்கு இந்த நாற்காலிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நாற்காலிகள் பழைய இரும்புக்கடையில் கிடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே போல் பேருந்து நிலையத்தை சுற்றி கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் வேலியும் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து மாயமானது.

மக்களின் வரிப்பணத்தில் அவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்படும் இது போன்ற பொருட்களை பேரூராட்சி முறையாக பராமரிக்காத காரணத்தால் இவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. மொத்தத்தில் இதனால் இழப்பு என்னவோ மக்களுக்கு தான்.