Adirai pirai
உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டை பாமணி ஆற்றுக்கு வந்தது காவிரி நீர்!

மேட்டூர் அணை கடந்த 19ம் தேதி திறக்கப்பட்டதுடன், நீர்வரத்து காரணமாக கல்லணை 22ம் தேதி திறக்கப்பட்டது.

அங்கிருந்து வெண்ணாற்றில் திறந்த தண்ணீர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணையை வந்தடைந்தது. இங்கிருந்து பொதுப்பணித்துறையினர் கடந்த 25 ஆம் தேதி வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகியவற்றினை நம்பியுள்ள விவசாய பகுதிகளின் பாசனத்திற்கான தண்ணீரை திறந்து விட்டனர்.

இதில் பாமணி ஆற்றில் திறக்கப்பட்ட 410 கன அடி தண்ணீர் முத்துப்பேட்டைக்கு வந்தடைந்தது. இதன் மூலம், நீர் நிலைகள் நிரம்புவதுடன், விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் அனைவரும்

மகிழ்ச்சியடைந்துள்ளனர்.