Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் கால்வாய் பிரச்சனைகளை நேரில் பார்வையிட்ட செயல் அலுவலர்!

அதிரையில் பல்வேறு பகுதிகளில் கால்வாய் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. கடற்கரைத்தெரு, கடைத்தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு போன்ற பல்வேறு பகுதிகளில் நிலவும் சாக்கடை பிரச்சனைகளை நமது அதிரை பிறையில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஆனால் இதனை பேரூராட்சி கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில், இன்று அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலர் வருகை தந்தார். இதனை அறிந்த அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரிஸ், சமூக ஆர்வலர் குலாம் உள்ளிட்டோர் செயல் அலுவலரை சந்தித்து ஊரில் நிலவும் முக்கிய பிரச்சனை எடுத்துரைத்தனர்.

இதையடுத்து அவர்களுடன் செயல் அலுவலர், அதிரை காதிர் முஹைதீன் பள்ளி, பாவா மெடிக்கல்ஸ், பேரூந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நிலவும் கால்வாய் பிரச்சனைகளை நேரில் பார்வையிட்டார். இவருடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளரும் உடனிருந்தார். இதையடுத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என செயல் அலுவலர் உறுதியளித்தார்.