Adirai pirai
exclusive sports உள்ளூர் செய்திகள்

தமிழக அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அதிரை வீரர்!

44 ஆம் ஆண்டு தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் மதுரை ரைபிள் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் அசோசியேசன் சார்பில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் ரைபிள் மற்றும் பிஸ்டல் என இரண்டு பிரிவுகளின் கீழ் 10 மீட்டர் தொடங்கி 50 மீட்டர் வரையிலான போட்டிகள் நடைபெற்றது வருகின்றன. இதில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று மாலை நடைபெற்ற ரைபிள் பிரிவின் 10 மீட்டர் தொலைவிலான போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (வயது 44) அவர்கள் கலந்துகொண்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கான முடிவுகள் இத்தொடர் முடிவடைந்த உடன் அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான ரைபிள் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.