Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அலட்சியம் செய்த அதிரை பேரூராட்சி – களம் இறங்கிய இளைஞர்கள்!

அதிரை புதுத்தெரு பகுதியில் சாக்கடையில் அடைத்திருந்த குப்பைகளையும் அசுத்தங்களையும் முழுமையாக சுத்தம் செய்யப்படாமல் வாய்கால் ஓரமாக குவித்து வைத்துள்ளனர்.

இதனை அள்ளும் படி கூறிய பொதுமக்களின் அறிவுறுத்தலை பேரூர் ஊழியர்கள் ஏற்கவில்லை எனவும். இது தொடர்பாக அப்பகுதிமக்கள் பேரூராட்சி அதிகாரிக்கு தொடர்பு கொண்டு பேசியதற்கு இன்று அள்ள இயலாது என்பது போல் கூறி அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி அசுத்தம் சூழ்ந்து காணப்பட்டது. அப்பகுதியை சுத்தம் செய்ய இளைஞர்கள் களம் இறங்கி அசுத்தங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.