Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை மேலத்தெருவில் TNTJ சார்பில் சந்திர கிரகணத் தொழுகை அறிவிப்பு..!

இன்ஷா அல்லாஹ் இன்று (27.7.18) இரவு 10.44 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்புள்ளது.

கிரகணத்தைப் பார்த்தால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது நபிவழியாகும். அதன் அடிப்படையில் அதிரை மேலத்தெரு மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நள்ளிரவு முதல் கிரகண தொழுகை மற்றும் அதனை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு நன்மையடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மஸ்ஜிதுல் ஹிதாயா

(சானாவயல், மேலத்தெரு)

அதிரை கிளை – 3