Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை மரைக்கா பள்ளியில் இரவு 11 மணிக்கு கிரகண தொழுகை!

இன்று (27.7.18) இரவு 10.44 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்புள்ளது.

கிரகணத்தைப் பார்த்தால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது நபிவழியாகும். அதன் அடிப்படையில் அதிரை மரைக்கா பள்ளியில் இரவு 11 மணிக்கு கிரகண தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.