Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் லியோனி கலந்துகொண்ட கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் இன்று இரவு திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கருணாநிதியின் சிறப்புகள் குறித்தும், கட்சியை அவர் கட்டிக்காத்த விதம் குறித்தும், நடப்பு அரசியல் சூழல் குறித்தும் தன்னுடைய பாணியில் பேசினார். இதில் பெண்களுக்கு தையல் மெசின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் அதிரை, பட்டுக்கோட்டை சுற்றிவட்டார பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.