Adirai pirai
உலகம் தமிழகம்

துபையில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு

துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அற நிலையத்துறை சார்பாக பண்முக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 40க்கும் மேற்பட்ட மொழி மற்றும் கலாச்சாரங்களின் கண்காட்சிகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.

அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மொழி கலாச்சாரங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். துபை அல்குரைர் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி நேற்று (27/07/18) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமயத்துறை தலைவர் டாக்டர். அல் குபைசி அவர்களும், கலாச்சார துறை தலைவர் ருவையா அவர்களும் கலந்து கொண்டு கண்காட்சியில் பங்குபெற்ற மொழி மற்றும் கலாச்சாரங்களில் சிறந்த முதல் மூன்று பரிசுகளை தேர்வு செய்தனர், இதில் தமிழ் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரங்கத்தில் “திருக்குறள், தமிழ் தோன்றிய வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் என அனைத்தும் காட்சிபடுத்தியிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்வில் இரண்டாவது பரிசு பெங்காலிக்கும், மூன்றாவது பரிசு எத்தியோப்பியாவுக்கும் கிடைத்தது. இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.