Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை SDPI இலியாஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 எஸ்.ஐ களுக்கு ₹75 ஆயிரம் அபராதம்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர், முகமது இல்யாஸ். தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் தலைவராக உள்ளார். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

அரசியல் கட்சி ஒன்றில், பொறுப்பில் உள்ளேன். பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக கூட்டம் நடத்த, அதிராம்பட்டினம் காவல் நிலையம் செல்வேன். அப்போது பணியாற்றிய, எஸ்.ஐ.,க்கள், ராஜ்கமல், ரவிச்சந்திரன், முத்துலட்சுமி ஆகியோருடன், தகராறு ஏற்பட்டது.இதை மனதில் வைத்து, வாகன சோதனையின் போது, மூன்று போலீசாரும் என்னை அடித்து துன்புறுத்தினர். எனவே, மூன்று போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதாவது:சாட்சிகள், ஆவணங்கள் வாயிலாக, எஸ்.ஐ.,க்கள் மூன்று பேரும் தவறு செய்திருப்பது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு, தமிழக அரசு, 75 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். அந்த தொகையை, எஸ்.ஐ.,க்களின் சம்பளத்தில் இருந்து, தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம் பிடித்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போலீசின் அத்துமீறல், அராஜகப்போக்கிற்கு எதிராக 5 ஆண்டுகளாக ஜனநாயக வழியில் சட்டப்போராட்டம் நடத்தியதன் விளையாவகவே இந்த வெற்றியை இலியாஸ் அவர்களால் பெற முடிந்தது. விடா முயற்சியுடன் சட்டப்போராட்டங்களை நடத்தினால் அப்படிப்பட்ட சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.