Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை பள்ளிகளுக்கு அருகில் விற்கப்படும் தரமற்ற ஜூஸ் பாக்கெட்டுகள்!

அதிரையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியான பெயரில், தரம் குறைந்த குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், டைபாய்டு, மஞ்சள் காமாலை, தொண்டை அழற், காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளன. இதனை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமில்லாத பொருட்கள், அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள், பாதுகாக்கப்படாத தண்ணீர் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குளிர் பானங்களால் வயிற்றுப்போக்கு, புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.