Adirai pirai
history POLITICS உள்ளூர் செய்திகள்

கருணாநிதியின் இளம் வயது நண்பர் அதிராம்பட்டினம் N.S.இளங்கோ (97) மரணம்

நேற்று முன்தினம் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள்2வது நாளாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த கருணாநிதியின் பாலிய நண்பர் அதிரை NS இளங்கோவன் தஞ்சையில் இன்று காலமானார். இவருக்கு வயது 97.

திமுகவின் முதல் மாவட்ட செயலாளரான இவருக்கு அதிராம்பட்டினம் தான் சொந்த ஊர். இவர் வீடு இருந்த இன்றைய ஹபீபா மால் உள்ள இடத்தில் ஒரு பெரிய நூலகத்தைக் கொண்டு இருந்தது. அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமானவர். கலைஞரின் திறமைகளைக் கண்டறிந்து அவரை உருவாக்கிய சிற்பிகளில் இளங்கோ அவர்களும் ஒருவர். நல்ல வசதியான குடும்பத்தின் வாரிசான ஸ்ரீராமுலு என்ற இயற் பெயர் கொண்ட இளங்கோ, திராவிட இயக்கத்தில் பணியாற்றவே தனது பெயரை மாற்றிக்கொண்டதுடன், பல சொத்துக்களை கட்சிப்பணிக்காக விற்றவர்.

தற்போது தஞ்சையில் வசித்து வந்தார். வசதி படைத்த குடும்பத்தைச்சேர்ந்த இவர், திமுக தலைவர்கருணாநிதியை வாடா போடா எனக் கூப்பிடும் அளவிற்கு நெருங்கிய நண்பர். கருணாநிதி தயாளு அம்மாள் திருமணத்தின் போது அண்ணாவுடன் சேர்ந்து இவரும் சொற்பொழிவாற்றினார்.

இதேபோல தீவிர நாத்திகவாதியான நன்னன் தன் பணி ஓய்வுக்குப் பின் திமுகவுடனும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டு பணியாற்றினார். முதுபெரும் தமிழறிஞர் மா.நன்னன் கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

திமுக தலைவரின் பள்ளி நண்பர்களான மா.நன்னன் மற்றும் இளங்கோவன் வாடா போடா என பேசும் அளவிற்கு நண்பர்களான இவர்களில் கடந்த ஆண்டு மா.நன்னனும், இன்று என்.எஸ் இளங்கோவனும் மறைந்துள்ளனர்.