Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே மழையால் வீடுகள் சேதம், MLA சேகர் நேரில் பார்வையிட்டு உதவி!

அதிரை அருகே கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கன மழையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் ஒரு வீட்டில் தாய் மற்றும் மகள் (மகேஷ்வரி, சூர்யா) இரண்டு பேருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தன்னுடைய ருபாய் 5000 வழங்கி ஆறுதலும் கூறினார்.

அத்துடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இடமும் அத்தியாவசிய பொருட்களும் ரூ.2000 பணமும் வழங்கி உடனடியாக அந்த இடத்தை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.