Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சுற்றுவட்டார கிராம மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை!

கடந்த வாரம் அதிரை சுற்றுவட்டார கிராமங்களான அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பழஞ்சூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பொதுப்பணிதுறை உதவி செயற்பொறியாளரை சந்தித்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்,காவிரி ஆற்று நீரை கொண்டுவந்து நீர் நிலைகளை நிரப்ப வேண்டும் என்று மனுக்கொடுத்தனர்.

இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று மீண்டும் பொதுப்பணிதுறை அலுவகத்துக்கு சென்று நாளைக்குள் தண்ணீர் பட்டுக்கோட்டைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கல்லணை திறந்து பத்து நாட்கள் ஆகியும் கடைமடையான அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு இந்த நிமிடம் வரை தண்ணீர் வராதால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.