Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை, பட்டுக்கோட்டை கடைமடைக்கு வராத தண்ணீர் – கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கல்லணை திறந்து அடுத்த மூன்றாவது நாள் வந்து சேர வேண்டிய காவிரி தண்ணீர் இந்த நிமிடம் வரை அதிrai, பட்டுக்கோட்டை கடைமடைக்கு வந்த சேரவில்லை. கடந்த ஐந்து வருடங்களாகவே நீர் இல்லாமல் அனைத்து நீர் நிலைகளும் காய்ந்துபோய், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல்களும் இயங்காமல் போய் மிகப்பெரிய வரட்சியை நோக்கி ஊர் சென்று கொண்டு இருக்கிறது.

கர்நாடகாவில் திறக்கப்பட்ட உபரி நீர் நூற்றுக்கணக்கான மைல்களை கடந்து மேட்டூர் வந்து அங்கிருந்து திறக்கப்பட்ட அதிப்படியான தண்ணீர் கல்லணைக்கு விடப்பட்டு, கல்லணையிலிருந்து அதிகப்படியான நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் போய் கடலில் கலந்துவிட்டது. ஆனால் நமதூருக்கு தண்ணீர் வரவே இல்லை. இதனை கண்டித்து பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.