Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

அதிரையில் மின்பழுது சீர்செய்யும் பணி தீவிரம்… இன்று மாலை 6 மணி வரை மின்தடை

அதிரையில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வான ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மின் வாரியத்தினருக்கு அதிரையர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் அதிரை பேருந்து நிலையம் அருகே தாழ்வான மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி அதிரையில் இன்று மாலை 6 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக உதவி மின் பொறியாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் மின்பழுதுகளை சீர் செய்ய அதிரையில் ஒருநாள் மின் தடை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அவசர மின் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.