Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையர்களே எப்போது திருந்த போகிறோம்! வேண்டுகோள்!

அதிரையின் பல பகுதிகளில் தார் சாலை காணாமல் போன நிலையில் பேரூராட்சியின் தரமற்ற சாலை அமைத்தது ஒரு காரணம் என்று நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போது வாய்கால் தெரு, நடுத்தெரு கீழ்புறம், மார்கெட் மற்றும் தைய்கால் தெரு வரை சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முன்பு அமைத்த சாலை அவ்வளவு தரமானதாக இல்லாத பட்சத்தில். தற்போது கப்பியை தவிர்த்து ஜல்லி அதன் துகள்கள் கொண்டும் சாலை அமைத்து வருகின்றனர்.

இன்று ஒரு வீட்டில் போர் போடப்பட்ட தண்ணீரை சாலையில் திறந்து விட்டதன் காரணமாக ஜல்லி கற்கள் தனித்தனியே நீரோடு அடித்து செல்லப்பட்டது.

இதற்கும் பேரூராட்சி தான் காரணம் என்று சொன்னாலு சொல்லுவர் அறியாத சிலர். சாலை அமைக்கும் பணி முடிவடையாத நிலையில் இது போன்று தண்ணீர் திறந்து விட்டு சேதங்களை ஏற்படுத்துவது சரியானதல்ல.

இது குறித்து சம்பந்தப்பட்ட காண்ட்ரக்டரிடம் நாம் விசாரித்த போது. இது சம்பந்தமாக சிலர் அவருடன் பேசி இருப்பதன் அடிப்படையில் இப்பணியை நிறுத்தி கொள்வதாக நம்மிடம் கூறினார்.

வேண்டுகோள்:

இல்ல தேவைகளுக்காக சாலையை உடைக்க நேர்ந்தால் வேலை முடிந்த உடன் சாலையை சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சாலை நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதுமட்டுமின்றி சிறிதளவு இருக்கும் குழி நாளடைவில் பள்ளமாகி சாலையெங்கும் குண்டும் குழியுமாகத்தான் காட்சி தரும்.

இனி வரும் காலங்களில் மாற்றி கொள்வோம்.