Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே கோவில் சுவர் மீது கார் மோதி விபத்து..!

மதுரையை சேர்ந்த சிலர் காரில் வேளாங்கண்ணிக்கு ஈசிஆர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். இன்று காலை அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை அருகே இவர்களது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கோவிலின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் காயமடைந்த காரில் சென்றவர்கள் முதலுதவிக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கூடுதல் சிகிச்சைக்காக மதுரைக்கே கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.