Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில் நிலையத்தில் நிலத்தடி மின்கம்பிகள் புதைக்கும் பணி தீவிரம்!

காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி ரயில்நிலைய கட்டுமானப்பணிக்கான பொருட்களுடன் அதிரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்தடத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயில் வந்தது.

இந்த நிலையில் பல்வேறு பணிகளுக்கு மத்தியில், ரயில் நிலைய மின் தேவைகளுக்காக நிலத்தடியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.