Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை அமைக்கும் பணி தீவிரம்! (Exclusive)

அதிரை வாய்கால் தெரு – நடுத்தெரு கீழ்புறம் – தக்வா பள்ளி மார்கெட் தொடர்ந்து – சின்ன தைய்க்கால் சாலை வழியாக ECR சாலையில் வரையிலான புதிய தார் சாலை சுமார் 30 லட்சம் செலவில் அமைப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 24ஆம் தேதி சாலை அமைக்கும் பணி துவங்கியது. முன்பெல்லாம் பல நாட்கள் கிடப்பில் போடப்பட்ட பிறகு தான் வேலை நிறைவு பெறும் ஆனால் சுமார் 14 நாட்களிலயே பணி நிறைவு பெற இருப்பது ஆச்சர்யம் தான். சாலை அமைக்கும் முறை மக்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இன்று அமைக்கப்படும் சாலைகளுக்கு மேல் நாளை மீண்டும் ஒரு அடுக்கு (Layer) அமைக்கப்பட உள்ளனர்.

அதிகாரிகள் களத்தில் நின்று பணியினை கண்காணிப்பது வரவேற்கத்தக்கது.