Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்குமா?

அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நேற்று சஃபீக்கா என்ற மாணவி வீட்டு பாடம் எழுதாத காரணத்தால் ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் அந்த மாணவிக்கு கையில் இரத்தம் கொட்ட துவங்கியது. பள்ளி சீருடையில் இரத்தங்கள் பரவிய நிலையில் இதனை மறைக்க பள்ளியில் இருந்த பழைய சீருடையை அந்த மாணவிக்கு அணிய கொடுத்ததாக கூறப்படுகிறது.

இரத்தம் வரும் அளவிற்கு அடித்தது ஒரு புறம் இருக்க அதனை அந்த மாணவியின் பெற்றோருக்கு முறையாக தெரிவிக்காமல். சீருடையை மாற்றி திருட்டுத்தனம் செய்திருக்கும் ஆசிரியை மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கான CSR நகல் இன்று மாலை காவல் துறையினர் வழங்குவதாக வாக்களித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.