Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மீனவர்களின் கைகளை குத்தி காயப்படுத்தும் வெட்டரிசான்கள்!

அதிராம்பட்டினம் பகுதியில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். கடலில் மீன்களுக்காக வலை விரிக்கும்போது மீன்கள், இறால் ஆகியவற்றோடு வெட்டரிச்சானும் அகப்படுகிறது. வெட்டரிச்சான் என்பது இறால் இனத்தை சேர்ந்தது. ஆனால் இதை உணவாக உட்கொள்வதில்லை. வலைகளில் அகப்படும் வெட்டரிச்சான்களை மீனவர்கள் வீசிவிடுவர். அதிராம்பட்டினம் பகுதி கடலில் தற்போது வெட்டரிச்சான் அதிகளவில் அகப்படுகிறது. வெட்டரிச்சான் உடல் முழுவதும் கூர்மையான பிளேடு போன்று முட்கள் இருக்கும். இதனால் வலைகளில் இருந்து எடுக்கும்போது மீனவர்களின் கையில் காயம் ஏற்படுத்திவிடும்.

இதுகுறித்து மீனவர் சங்கர் கூறுகையில், ‘கடலில் இறால், மீன்களை பிடிப்பதற்காக விரிக்கும் வலைகளில் வெட்டரிச்சான்கள் அதிகளவில் அகப்படுகிறது.

இது உணவுக்கு பயன்படாது.இதை வலையில் இருந்து அகற்றும்போது கைகளில் முட்கள் குத்தி கிழித்து விடுகிறது. ஒரு மணி நேரத்துக்கு காயமடைந்த இடம் கடுத்து கொண்டே இருக்கும். தற்போது மீனவர்கள் வலையில் அதிக அளவு வெட்டரிச்சான்கள் அகப்படுகிறது’ என்றார்.

நன்றி: தினகரன்