Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளம் முழுமையாக மூடப்பட்டது!

அதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது. அனைத்து நேரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இந்த இடத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.மேலும் இப்பள்ளத்தில் கழிவு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லையும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது பற்றி கடந்த 5 ஆண்டுகளாக 10 மேற்பட்ட முறை நமது தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளோம். சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காவும் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து கடந்த 11 ஆம் தேதி நமது அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த வாரம் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பொதுமக்கள் சுகாதார ஆய்வாளரை முற்றுகையிட்டு பள்ளத்தை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதிரை பிறையில் வெளியிடப்பட்ட இந்த பதிவு மாவட்ட உதவி இயக்குனர் விஸ்வனாதனின் கவனத்திற்கு ரெட் கிராஸ் நகர சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அவர்களால் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், அதிரை பேரூராட்சி சார்பில் இந்த ஆபத்தான பள்ளத்தை மூடும் பணி கடந்த ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இது தற்போது முழுமையாக தயாராகி உள்ளது.