Adirai pirai
FLASH NEWS இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள்

மதுக்கூர் அருகே பிரான்ஸ் நாட்டவர் கொலை!

மதுக்கூர் அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

அவிக்கோட்டை சேர்ந்த திருமுருகனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டரும் 5 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி திருச்சி வந்தார் பீட்டர். 5 ஆம் தேதி மன்னார்குடியில் பீட்டரும் திருமுருகனும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் ஆவிக்கோட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு பீட்டரை அழைத்து சென்ற திருமுருகன் அன்று இரவு மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திருமுருகன் பீட்டரை தள்ளியதில் பீட்டர் கீழே விழுந்தார். அச்சமடைந்த திருமுருகன் பீட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று சாக்குகளில் கட்டி வயலோரம் தூக்கி எறிந்துள்ளார் திருமுருகன். ஒரு வாரத்திற்கு பிறகு திருமுருகன் தான் செய்த தவறை போலீசில் சரணடைந்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் திருமுருகன்.