Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் அதிரை திமுக வினர் அஞ்சலி!

திமுக தலைவர் கருணாநிதியின் மரணமடைந்து ஒருவாரம் கடந்துள்ளது. இந்த நிலையில், அதிரை நகர திமுக வினர் 50க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் இன்று சென்னை வந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் அதிரை பேரூர் கழக திமுக செயலாளர் இராம.குணசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், துணைச்செயலாளர் அன்சர்கான், ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது உள்ளிட்ட பலர் கலைந்துகொண்டனர்.