Adirai pirai
exclusive history islam உள்ளூர் செய்திகள்

நாட்டின் சுதந்திரத்திற்காக சிறை சென்ற அதிரை S.S.இபுறாகீமை தெரியுமா?

நாளை இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்கள் அறியாமையை வெளிப்படுத்துவர். ஆனால் சுதந்திர போரட்டத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கையில் எத்தனயோ இன்னல்கள், கொடுமைகள், தியாகங்ளை அனுபவித்துள்ளனர். அவர்களில் அதிரை கீழத்தெருவை சேர்ந்த தியாகி S.S.இபுறாகீமும் ஒருவர்.

இவரை திருமணமான அடுத்தநாள் பிரிட்டிஸ் அரசு கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தது. அப்போது அவர்களுடன் ஜெயிலில் இருந்தது முன்னால் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்கள். அந்த காலத்தில் திருமணம் முடிந்தால் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு எல்லாம் உண்டு. இவை எதுவுமே இல்லாமல் 6 மாதம் ஜெயிலில் தண்டனை அன்பவித்துள்ளார். மேலும் பின்னாலில் நமதூருக்கு வந்த காமராஜர் இவர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இப்படிப்பட்ட தியாக செம்மல்களை இந்நாளில் நினைவு கூறுவோம்.