Adirai pirai
history islam இந்தியா உள்ளூர் செய்திகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நண்பர் தியாகி முத்துப்பேட்டை முஹம்மது தாவூதை உங்களுக்கு தெரியுமா?

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது. ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர்.

ஒருமுறை பர்மாவில் நடந்த முகாமுக்கு மாறுவேடத்தில் வந்த நேதாஜியை உள்ளே விட தியாகி முகமது தாவுது மறுத்துள்ளார். பின்னர் வேடத்தை கலைத்த பிறகு தான் நேதாஜியை முகாமிற்குள் அனுமதித்துள்ளார். அன்று முதல் நேதாஜிக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்.

தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் வாங்கி வந்த முகமது தாவுது கடந்த 2015ம் ஆண்டு வஃபாத்தானார்.