Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று 72 வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா பள்ளி முதல்வர் மீனாகுமாரி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓ.கே.எம்.சுபகத்துல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர் முஹம்மது சலீம், சுற்றுச்சுழல் மன்றம், அய்டா நிர்வாகிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.