Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை ATM இல் ₹45,000 பணத்தை போலீசிடம் வழங்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டிய அய்டா!

கடந்த ஜூன் மாதம், நமதூர் இந்தியன் வங்கியில் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அப்ஸர் மற்றும் அவரது நண்பர் சுஹைல் பணம் செலுத்துவதற்காக ATM மையத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள CDM இயந்திரத்தில் பணம் வைக்கும் இடத்தில் சுமார் ₹45,000 இருந்ததை கண்ட அவர்கள் அதனை எடுத்து அதிரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவின் போது, ஜித்தா அய்டா நிர்வாகிகள் (Adirai Youth Development Association, Jeddah), ஏடிம் இயந்திரத்தில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்கப்பட்டது. இதில், அய்டாவின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.