Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடிய ரோட்டரி சங்கத்தினர்!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K.திருநாவுக்கரசு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.M.K.முகமது சம்சுதீன் அவர்கள் மற்றும் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர், சங்க பொருளாளர், Rtn.S.சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதியாகிகள் பற்றி உரையாற்றினார்கள்.

இந் நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக ஆதரவற்ற ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளாக ஒரு பெண்மணிக்கு கிரைண்டர் மற்றும்,தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துணிமணிகள் வழங்கபட்டது. இந்நிகழ்வில் மன்னார்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அதிரை ரோட்டரி சங்க உறுப்பினர்கள்

Rtn.முகமது நவாஸ்கான் மற்றும் Rtn.ஆறுமுகம், Rtn.உதயகுமார், Rtn.அய்யாவு, Rtn.முகமது தமீம், Rtn.நடராஜன், Rtn.கஜேந்திரன், Rtn.அமீன் நவாஸ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.