Adirai pirai
உள்ளூர் செய்திகள்

தூக்கப்போவது யாரு? அதிரையில் மல்லுக்கட்டும் மின்வாரியமும், பேரூராட்சியும்!

மாதாந்திர மின்சார சீரமைப்பு காரணமாக அதிரையில் இன்று மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து அதிரை சிஎம்பி லேன் பகுதியில் மின் கம்பிகளுக்கிடையே சிக்கிக்கிடந்த மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டிப்போட்டனர். இதில் சில கிளைகள் மின் கம்பிகளில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருந்தன. இதையடுத்து அதிரையர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அந்த மரக்கிளை அகற்றப்பட்டது.

ஆனால், இந்த மரக்கிளைகள் அனைத்தும் சி.எம்.பி வாய்காலிலேயே கிடக்கின்றன. இவற்றை அகற்றுவது பேரூராட்சியா? அல்லது அதை வெட்டிப்போட்டா மின்வாரியமா? என மல்லுக்கட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாய்காலில் கிடக்கும் மரக்கிளைகள் கழிவு நீர் பாதையையும் அடைக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.