Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை கேரள மக்களுக்காக நிதி திரட்ட உள்ளனர்!

அதிரையில் நாளை (17.08.2018) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழுகைக்கு பிறகு இயக்கங்கள், தொண்டு அமைப்புகள் சார்பாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

நிவாரணத்திற்காக பணம், ஆடைகள், பெட்சீட், கெடாத உணவு பொருட்கள் வாங்க உள்ளனர். தங்களால் இயன்ற உதவியினை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களின் மூன்று கிளைகளில் சேரக்கூடிய ஜும்மா வசூல்களை முழுமையாக கேரள மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.