Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

மதுக்கூரை போல் அதிரையிலும் பின்பற்றலாமே!

நாளை மறுநாள் தமிழகத்தில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று இஸ்லாமியர்கள் அரஃபா நோன்பை நோற்றனர். அதிரையை அடுத்துள்ள மதுக்கூரில் தமுமுக சார்பில் அரஃபா நோன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரமலான் மாதத்தில் வழங்குவதை போல், நோன்பு கஞ்சியும் இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தினர். இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வால் 75% மதுக்கூர் மக்கள் அரஃபா நோன்பை நோற்றுள்ளனர். இதில் ஏராளமான நோன்பாளிகள் நோன்புக்கஞ்சி வாங்கிச்சென்றதுடன், இஃப்தார் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இதுபோல் அதிரை பள்ளிகளோ அல்லது அமைப்புகளோ பின்பற்றினால் அரஃபா நாள் நோன்பின் மீதான விழிப்புணர்வு அதிகரிப்பதுடன் மக்களும் ஆர்வமுடன் நோன்பு நோற்பார்கள்.