Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே அறிவின் கண்களை மூடிய அரசாங்கம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது நடுவிக்காடு கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம் கடந்த 8 எட்டு வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. கடந்து 2010 ஆம் ஆண்டுக்கும் முன்பாக இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இங்கிருந்த கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம், நாவல் என பல நூல்களை சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள், ஊர்வாசிகள் படித்து பயன்பெற்றனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட இந்த நூலகம் இன்றுவரை திறக்கப்படாத நிலையில் உள்ளது.

இந்த நூலகத்தை மீண்டும் செயல்பட வைக்குமாறு அரசிடம் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.