Adirai pirai
posts

அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மதங்கள் பாகுபாடின்றி ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேரா.K.செய்யது அஹமது கபீர் வரவேற்புரையில் துவங்கி, அதிரை M.B.அஹ்மத் அவர்கள் தலைமையில், தமிழன் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சதக்கத்துல்லா உமரி சிறப்புரையாற்றிய பின்னர் M.I.அன்வர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இதில் சில இஸ்லாத்தின் அடிப்படை சட்டத்திட்டங்கள் மார்க்க விஷயங்கள் என பல தகவல்கள் பரிமாறப்பட்டது.

மார்க்க அறிஞரால் கேட்கப்பட்ட கேள்வி பதில் போட்டியில் சிறப்பாக பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பிற மத மக்கள் இஸ்லாம் சார்ந்த கேள்விகளை மார்க்க அறிஞரிடம் கேட்கபட்டனர். அதற்கான விடைகளும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மதநல்லிணக்கம் பேணும் ஓர் நிகழ்வாக அமைந்திருந்தது.