Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் தரமற்ற சாலைகள் அமைத்து வருவதாக குற்றச்சாட்டு! (Exclusive)

அதிரை சேர்மன் வாடியில் துவங்கி செக்கடிமேடு, நடுத்தெரு, ஜாவியா ரோடு வழியே ECரோடு வரையிலான புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் முறை சரியானதாக இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி பழைய சேதமடைந்த தார் சாலையை JCB இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட ஜல்லி கற்களை அப்புறப்படுத்தாமல் அதற்கு மேல் புதிய சாலைக்கான கற்கள் நிரப்பப்பட்டு வருகின்றது.

சாலையின் தடிமன் அளவு மிகவும் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

இன்று காலை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் டெண்டர் காபி வழங்க வேண்டி பேரூராட்சி அலுவலக நிர்வாகிகளிடம் முறையிட்டனர். பின்னர் மனு அளித்தன் பெயரில் டெண்டர் விபரம் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

அதில் சாலை அமைக்க ₹50லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் அமைக்கப்படும் சாலை எத்தகைய தரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த ஒரு அடையாளமும் காண இயலவில்லை. ஏதோ கடமைக்காக அமைக்கும் சாலை என்பது போலவே இதற்கான பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலையின் உயரம் குறித்த புகைப்படங்கள்: