Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை நோக்கி பாய்ந்து வரும் ஆற்று நீர்!

மேட்டூர் அணையில்  ஜூலை 19-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்தடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் பொதுமக்கள், விவசாயிகள் வேதனையில்ல் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் இன்று முதல்சேரி பகுதிகளுக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதனை தொடர்ந்து நாளை நமதூர் குளங்களுக்கு நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.