Adirai pirai
இந்தியா

நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறையா?

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதத்தில், வங்கிகள் அனைத்தும் செயல்படும் என நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும், இதனால் ஏடிஎம் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. அதாவது செப்டம்பர் 2 முதல் 5 வரையிலும், செப்டம்பர் 8 முதல் 9 வரையிலும் 6 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டு வந்தது.

இது தொடர்பாக இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘செப்டம்பர் முதல் வாரத்தில் ஆறு நாட்களுக்கு வங்கிகள் மூடப்படுவதைப் பற்றிய சமூக ஊடகங்கங்களின் கருத்துக்கள் வதந்தி என்றும், வங்கிகள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தடையின்றி தொடரும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

செப்டம்பர் 3 திங்கள் அன்று ஜன்மாஷ்டமி விடுமுறை, இருப்பினும் டெல்லி, மும்பையில் உள்ள வங்கிகள் ஜன்மாஸ்டமி நாளில் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் செப்டம்பர் 4-5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. மேலும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அது வழக்கமான விடுமுறை ஆகிறது. அந்த நாட்களில் கூட, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும் மற்றும் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது. வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து வழங்குவதற்கு போதுமான பணத்தை வழங்க வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்கிகள் மற்ற நாட்களில் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.