Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டையில் அடுத்தடுத்து 100 வீடுகளில் வெடித்து சிதறிய எலெக்ட்ரானிக் பொருட்கள்!

முத்துப்பேட்டை பகுதியில் நேற்று மாலை திடீரென கூடுதல் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் அடுத்தடுத்து எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின. உப்பூர் கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.