Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் அவசர கூட்டம்!

அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக இன்று மாலை 7 மணியளவில் அயிஷா மகளீர் அரங்கில் மஷூரா நடைபெற்றது.

இதில் குளங்களுக்கு நீர் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த பிரச்சனையை கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. செப்டம்பர் 4ஆம் தேதி பட்டுக்கோட்டையில் இது சம்பந்தமாக போராட்டம் நடைபெற உள்ளது.

அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர். அது தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிரையில் சாலை மறியல் செய்வது தொடர்பான புகார் மனு அளிப்பது குறித்தும் பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் தோராயமாக சுமார் இரு நூறு நபர்கள் கலந்து கொண்டிருப்பர்.